ஒழுக்கம் கெட்டு போனால் அப்படித்தான் நடக்கும்.. அப்பா கடையில் பொட்டலம் போடும் அங்காடித்தெரு மகேஷ்

அங்காடி தெரு படத்தின் மூலம் தனக்கென்று சினிமா துறையில் ஒரு பெயரை எடுத்தவர் நடிகர் மகேஷ். கிராமத்து பையனாக, தத்ரூபமான நடிப்பை அந்தப் படத்தில் வெளிப்படுத்தி அனைவரின் மனதையும் வென்றார்.

எளிய குடும்பத்தில் பிறந்த மகேஷின் அப்பா தள்ளுவண்டியில் பட்டாணி விற்கும் வேலை செய்பவர். அப்பாவின் கடையில் உதவி செஞ்ச மகேசை பார்த்த வசந்தபாலன், அங்காடி தெரு படத்தின் மூலம் நடிகராக்கினார்.

அந்தப் படத்திற்கு பின், சில படங்களில் மகேஷ் தலை காட்டினாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வளர முடியாமல் போனது. ஆனால் அங்காடித்தெரு படத்தின் வெற்றியை வைத்தே தம்பி மகேஷ் பல கில்லாடி வேலைகளை செய்துள்ளார்.

அந்த படத்தின் வெற்றிக்கு பின், நான் அந்த படத்தில் நடிக்கிறேன், இந்த டைரக்டர் கூப்பிட்டுள்ளார் என பல புருடாக்களை அவிழ்த்து விட்டுள்ளார்.
அதை நம்பி பல இளம் பெண்கள் அவர் வலையில் விழுந்துள்ளனர். அப்படி அந்த பெண்களை வளைத்து பல தில்லாலங்கடி வேலைகளையும் செய்துள்ளார். அவர்கள் பணத்தில் பலநாட்கள் சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார்

இவர் அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டையில், இளம் பெண்கள் மட்டுமல்லாமல் சில வளர்ந்து வரும் நடிகைகளும் இருக்கிறார்களாம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப தம்பி செய்த செயல் எல்லாம் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

தப்பித்தோம் பிழைத்தோம் என இவர் பிடியில் இருந்த இளம்பெண்கள் எல்லாம் இவரை வசைபாடி, அடியை போட்டு விட்டு சென்றுள்ளனர். அப்புறம் என்ன தம்பி பாக்கெட் மணிக்கு ரொம்ப பஞ்சமானது. அப்பா காப்பாற்றுங்கள் என பட்டாணி கடைக்கே வந்து பொட்டணம் போட்டுக் கொண்டிருக்கிறார்.