ஒற்றுமையே இல்லாத இருவேறு ஹீரோக்களை களமிறக்கும் சுதா கொங்கரா.. வியப்பில் இருக்கும் கோலிவுட்

கோலிவுட் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். இந்த செய்தியை ஏப்ரல் 21 அன்று ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்ட ஹோம்பலே பிலிம்ஸ், “ஹோம்பலே ஃபிலிம்ஸில், இயக்குனர் சுதா கொங்கராவுடன் எங்கள் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்களின் எல்லாப் படங்களைப் போலவே இந்த படமும் இந்தியாவின் முழுவதுற்குமான படமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்” என பதிவிட்டிருந்தது.

” உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சுதா கொங்கரா கதையுடன் ஒரு புதிய தொடக்கத்திற்கு,” எனவும் பதிவிட்டிருந்தனர். சூரரைப் போற்று மற்றும் இறுதி சுற்று போன்ற படங்களை இயக்கியதன் மூலம் சுதா கொங்கரா மிகவும் பிரபலமானார். இவர் 2017இல் இறுதி சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான குரு படத்தையும் இயக்கியுள்ளார். பிரபலமான கேஜிஎஃப் உட்பட பல வெற்றிப் படங்களை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப்போது இந்த படத்தில் நடிப்பவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னரே சுதா கொங்கரா தன்னுடைய அடுத்த படம் சூர்யாவுடன் தான் என கூறியிருந்தார். அந்த கூற்று போலவே இந்த படத்தில் நாயகனாக அவர் தான் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யா ஒரு கெங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா “நந்தா, ஆறு, அஞ்சான் போன்ற படங்களில் கெங்ஸ்டராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அண்மை செய்திகளின் படி இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகர் சிம்புவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கோலிவுட்டில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடைய இரண்டாவது ரவுண்டில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிம்பு, சுதாவின் கதைக்கு ஓகே சொல்லியுள்ளாராம். சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த உடன் அவர் சுதா கொங்கரா படத்தில் இணையவுள்ளார்.

கோலிவுட்டின் சிறப்பான இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளதால், இப்போதே படத்தின் எதிர்ப்பு கூடியுள்ளது. சூரரை போற்று, ஜெய் பீம், எதிர்க்கும் துணிந்தவன் போன்ற வெற்றி படங்களை அடுத்து சூர்யா, வெற்றிமாறன் மற்றும் பாலாவுடன் இணைந்து பணிபுரிய உள்ளதால், மற்ற மொழிகளில் இருந்து பான் இந்திய ஸ்டார்கள் உருவாகி வரும் நிலையில் சூர்யாவும் இந்த படங்களின் மூலம் பான் இந்திய ஸ்டாராக உருவாகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுதா கொங்கரா தற்போது சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகளை துவங்கியுள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு அவர், சூர்யா-சிம்பு கூட்டணியில் ஹோம்பலே நிறுவனத்துடன் இணைந்து அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.