ஒரே வார்த்தையில் பீஸ்ட் படத்தை இழந்த கவின்.. இப்ப கண்ணீர் விட்டு கதறும் கொடுமை

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை இருக்கும் கவின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூட லிப்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தை பார்த்த பலரும் படத்தின் கதை அம்சம் சரியாக இருக்கிறது. கவினின் நடிப்பும் அளவுக்கு மீறாமல் அருமையாக இருக்கிறது எனக் கூறிவந்தனர்.

லிப்ட் படத்தை பற்றி கேள்விகள் கேட்டபோது அப்படியே அவரது நெருங்கிய நண்பர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் படத்தை பற்றிய தகவல்களும் கேட்கப்பட்டது. முதலில் நாசுக்காக பதிலளித்த கவினை விடாமல் தொடர்ந்து பீஸ்ட் படத்தை பற்றிய கேள்விகள் கேட்க பின்பு அதற்கு பதில் அளித்தார்.

அதாவது பீஸ்ட் படத்தில் நான் நடிக்கவில்லை, ஆனால் நடிப்பதற்கு என்னிடம் கேட்டார்கள் அப்போது நான் ஒரு சில படங்களில் பிசியாக நடித்து வந்ததால் என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நான் ஒரே பிஸி என ஒரே வார்த்தையில் பீஸ்ட் படத்தை இழந்தார். இதனை நெல்சன் திலீப்குமார் புரிந்துகொண்டார். அதேபோல் இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தற்போது நான் ஹீரோவாக படங்கள் நடித்து வருவதால் உதவி இயக்குனராக பீஸ்ட் படத்தில் பணியாற்ற முடியவில்லை. எனக்கும் இப்படத்தில் பணியாற்ற வேண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது சரியாக அமையவில்லை என கூறினார். இப்படத்தை பற்றிய ஒரு சில விஷயங்கள் தெரியும் என வெளிப்படையாக கூறினார்.

மேலும் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் எப்படி உருவாகிறது என்பதை பார்ப்பதற்காகவே அடிக்கடி பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை கேட்டு அங்கு சென்று பார்ப்பேன். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற மால் காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் எனகூறினார்.

கடைசியாக பீஸ்ட் படத்திற்கும் எனக்கும் பெரிய சம்பந்தம் இல்லை என்னை ஏன் இப்படி பாடாய் படுத்துகிறரிர்கள் என்று கண்ணீர் விடாத குறையாக கேள்வி கேட்டவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.

பொட்டியை கட்டிய IPS சந்தியா.. வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்கும் சரவணன்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தன்னுடைய ஐபிஎஸ் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு மாமியார் சொன்னபடி நல்ல மருமகளாக சந்தியா முயற்சிக்கிறாள். இருப்பினும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொள்ளமுடியாமல் சந்தியா படும்பாடு சரவணனுக்கு ...