தமிழ் சினிமாவில் கோடிகணக்கில் வசூல் சம்பாதித்த தயாரிப்பாளர்களும் உண்டு, படத்தினால் நஷ்டம் ஆன தயாரிப்பாளர்களும் உண்டு. சினிமாவைப் பொருத்தவரை வெற்றியும், தோல்வியும் நிரந்தரம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால்தான் தற்போது வரை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.

சினிமாவைப் பொருத்தவரை லாபம் என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே கிடையாது. படத்தை வாங்கி வெளியிடும் டிஸ்ட்ரிபியூட்டருக்கும் மற்றும் படத்தை ஒளிபரப்பும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கூட லாபத்தில் பங்கு உண்டு. இவ்வளவு ஏன் தயாரிப்பாளர் படத்தை தயாரித்து விற்று விடுவது மட்டுமே அவரது வேலை மற்றபடி படத்தின் லாபம் டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டதுதான்.

அதனால் முடிந்த வரை அனைவருமே படத்தை பெரிய அளவில் விற்கதான் முயற்சி செய்வார்கள். ஆனால் டிஸ்ட்ரிபியூட்டர்கள் படத்தினை சரியான விலைக்கு வாங்கி தியேட்டரில் வெளியிட்டு அதன் மூலம் வரும் லாபத்தினை சரிசமமாக பெற்றுக்கொள்வார்கள். அப்படி டிஸ்ட்ரிபியூட்டர்களில் ஒரு சிலர் மட்டுமே தான் வசூலை வாரி குவித்து உள்ளனர்.

திருப்பூர் சுப்பிரமணியம் என்பவர் ஒரே வருடத்தில் 6 படங்களை வெளியிட்டு வசூலை வாரி குவித்துள்ளார். அதாவது முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, பூவே உனக்காக, காதல் கோட்டை, சுந்தர புருஷன் மற்றும் மேட்டுக்குடி 6 படங்களை வெளியிட்டு வசூலை வாரி குவித்துள்ளார்.

தற்போது வரை ஒரு சில டிஸ்ட்ரிபியூட்டர்கள் தொடர்ந்து படங்களை வாங்கி நல்ல விலைக்கு திரையரங்குகளில் விற்று வருகின்றனர். சினிமாவில் தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் தியேட்டர் உரிமையாளர் உட்பட ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தாலும் வெற்றிப் படத்தின் மூலம் அதனை அவர்கள் சமாளித்து தான் வருகின்றனர்.