ஒரே வருடத்தில் குழந்தையும் கையுமாக மாறிய ஸ்ரேயா.. வீடியோவை பார்த்து செம்ம ஷாக்கிங்

பொதுவாக நடிகர், நடிகைகள் என்றாலே தங்களின் காதல் மற்றும் திருமணம் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்வர். அந்த வகையில் பிரபல நடிகை முக்கியமான ஒரு செய்தியை கடுகளவும் கசிந்திடாத வண்ணம் மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, தமிழ் படங்களில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், ஜீவா போன்ற நட்சத்திரங்களுடன் நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார் . குறிப்பாக அழகிய தமிழ் மகன், சிவாஜி, கந்தசாமி, ரௌத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.

இவ்வாறாக திரையுலகில் வலம் வந்த நடிகை ஸ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் பார்சிலோனாவில் செட்டிலாகிவிட்டார். இந்த கொரோனா நோய் பரவலின் ஊரடங்கு காலத்தில் நடிகை ஸ்ரேயாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

எனவே திடீரென்று ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஏனென்றால் இவர் சில மாத காலமாக தனது குழந்தை குறித்த எவ்வித தகவலையும் வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்தார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

மேலும் நடிகை ஸ்ரேயா தனது திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டார். அதனால் இவரைப் பற்றிய பேச்சு எங்கும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவுடன், கடவுளுக்கு நன்றி செல்வதாகவும், தனக்கு பெண் தேவதை கிடைத்திருப்பதாகவும், புதுவிதமான அனுபவமும் ஆச்சரியமும் நிகழ்ந்து கொண்டு வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாவின் அழகிய பெண் குழந்தை

வித்தியாசமான படத்தை கையிலெடுத்த பாலா.. முதல்முறையாக அதர்வாவுக்கு ஜோடியாகும் நடிகை

சினிமா திரையில் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு படங்கள் இயக்குனர்களின் சாயலும் இருக்கும். ஒரு திரைப்படத்தின் கதை அல்லது எடுக்கப்பட்டிருக்கும் விதத்தை வைத்தே இயக்குனர்களை நம்மால் கணிக்க முடியும். அந்த ...