தமிழ் சினிமா பல நடிகைகளை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர் சிலர் மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் உள்ளனர் அவ்வகையில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு காணாமல் போன நடிகைகளின் பட்டியல் இதோ.

பிரியா கில்: தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் பல மொழிகளில் நடித்தவர் நடிகை பிரியா கில் இவர் தமிழில் நடிகர் அஜித்துடன் இணைந்து ரெட் திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு சரியான வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்து விலகி தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

மானு: தமிழில் நடிகர் அஜித் நடித்த படம் காதல் மன்னன். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை மானு அறிமுகமானார் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் வந்த போதிலும் நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக சினிமாவை விட்டு விலகினார் நடிகை மானு அதன் பிறகு அவர் எந்த ஒரு மொழி படத்திலும் நடிக்கவில்லை இருப்பினும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நடிகையுமான நீங்கா இடம் பெற்றுள்ளார்.

மோனிகா: நடிகர் விஜயுடன் மின்சார கண்ணா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மோனிகா. இவர் நிறைய பாலிவுட் திரைப்படங்களில் நடித்தாலும் தமிழில் இந்த ஒரு படத்தை தவிர வேறு வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. தற்பொழுது இவர் திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் ஹிந்தி தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார்.

ரிங்கி கன்னா: ஹிந்தி திரைப்பட நடிகரான ராஜேஷ் கண்ணாவின் மகளான இவர் தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த மஜ்னு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் சில படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

ரோஷினி: தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் தான் குணா. இத்திரைப்படத்தில் அபிராமி எனும் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரோஷினி அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பாலிவுட் நடிகையான இவர் அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் சினிமா துறையை விட்டே காணாமல் போய்விட்டார்.