ஒரே நாளில் வருகிறது பீஸ்ட், ஏகே 62 அப்டேட் .. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தற்போது அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் விஜய் மற்றும் அஜித். இவர்கள் படம் வெளியாகிறது என்றாலே திரையரங்குகளில் மிகுந்த ஆரவாரத்துடன் வெளியாகும். அதுமட்டுமல்லாமல் இந்த இரு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவும்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அமைதியாக உள்ளது. இந்நிலையில் நாளை பீஸ்ட் படத்தின் போஸ்டர் உடன் அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அதேபோல் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு முக்கியமான அப்டேட் வர இருக்கிறது. சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.  ஏகே61 என தற்போது பெயரிட்டு உள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது.

ஏகே61 படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே62 படத்தைப் பற்றி முக்கிய அப்டேட் நாளை வர உள்ளது. ஏற்கனவே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அத்துடன் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இப்படத்தை லைகா புரடக்ஷன் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் நாளை மார்ச் 17ஆம் தேதி தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இருவரின் படத்திற்கான முக்கிய அப்டேட் ஒரே நாளில் வெளியாவதால் இந்த இரு ரசிகர்கள் தரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.