ரஜினி படம்னாலே எப்பவும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில இப்போ ரஜினி நடிப்புல உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு காரணம் முதல் முறையா இயக்குனர் சிவாவுடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளது தான். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்துல ரஜினி முழுக்க முழுக்க கிராமத்தானாகவே நடித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தில் ரஜினி தவிர நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.

அண்ணாத்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. பயங்கர மாஸ் டயாலாக்குடன் ரஜினி பேசும் இந்த டீசர் இணையத்தை கலக்கி வருகிறது.

படம் முழுக்க கிடா மீசையுடன் வலம் வரும் ரஜினி டீசரில் கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க கோபப்பட்டு பார்த்ததில்லயே என அதிரடியாக பேசும் வசனம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. மேலும் இந்த டீசர் வெளியான ஒரு நாளில் சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார், பேட்ட போன்ற படங்கள் அந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. எனவே அண்ணாத்த படம் அந்த எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தொடர் தோல்வி படங்களை வழங்கி வரும் ரஜினி இந்த முறை நிச்சயம் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.