ஒரே தோசையில் குப்புற விழுந்த கார்த்தி.. ஏதோ பெரிய புதையல் கிடைத்த மாதிரி பெருமிதம்

கார்த்தி தற்போது விருமன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெறாவிட்டாலும் போட்ட காசுக்கு பங்கம் விளைவிக்காமல் காப்பாற்றி உள்ளது.

அதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

அதிலும் ட்விட்டர் பக்கத்தில் இவர் பல சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதில் முக்கியமாக சாப்பாடு பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளார். இதைப் பற்றிதான் தற்போது ரசிகர்கள் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.

அதாவது கார்த்தி உட்லண்ட்ஸ் டிரைவ் இன் தியேட்டரில் கிடைக்கும் தோசையை பற்றி மிகவும் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். நான் பல இடங்களில் தோசை சாப்பிட்டுள்ளேன். ஆனால் இங்கு கிடைக்கும் தோசையை போல் வேறு எங்கேயும் நான் பார்த்தது கிடையாது.

இந்த தோசைக்காகவே நான் பலநாள் அங்கே சென்று தவமாய் தவமிருந்து உள்ளேன் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார். மேலும் தற்போது இந்த தோசைக்கு நிகரான ஒரு தோசையை கண்டுபிடித்துவிட்டேன் என்று பெருமையாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியில் அந்த தோசைக்கு நிகரான ஒரு தோசையை எக்மோரில் உள்ள அசோகா ஹோட்டலில் கண்டுபிடித்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஏதோ பெரிய புதையலை கண்டுபிடித்தது போல அலட்டிக் கொண்டு ஷேர் செய்துள்ளார்.