தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி எப்படியோ அதே போல தான் மலையாளத்தில் பகத் பாசில் இவர்கள் இருவருக்குமே இரு தரப்பிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த இரண்டு நடிகர்களும் விக்ரம் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ரசிகர் என்பதால் கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு ஏற்படும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என கூறி வருகின்றனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி அனைத்து விதமான காட்சிகளிலும் திட்டமிட்டபடி எடுத்து வருகிறார். கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் அவரது காட்சி மட்டும் தற்போது நிறுத்தி வைத்துள்ள படக்குழு. மற்ற நடிகர்களின் காட்சியை பட பிடித்து வருகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் அவரது சமூக வலைதள பக்கத்தில் விக்ரம் படத்தில் ஒரே காட்சியில் இரண்டு நடிகர்கள் நடித்துள்ளதாக கூறியுள்ளார். அது வேறு யாரும் இல்லை விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் தான். மேலும் இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சி திரையரங்கில் பார்த்தால் வேற லெவல் இருக்கும் என கூறி வருகின்றனர்.

மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் லோகேஷ் கனகராஜ் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் எனவும் இப்படம் வெளிவந்தால் லோகேஷ் கனகராஜ்ருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.