ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.? சிம்பு போட்ட மாஸ்டர் பிளான், மாட்டித் தவிக்கும் கௌதம் மேனன்

நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். சிம்புவின் மாநாடு படம் ஹிட்டுக்கு பிறகு தொடர்ந்து பல படங்களை தேர்வு செய்து வேற லெவலில் தன்னை தயார்படுத்திக் கொண்டு பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. அவரின் கம்பேக்கிற்கு பிறகு அடுத்து அவர் கமிட்டான அனைத்து படங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று சிம்புவின் ரசிகர்கள் நம்புகின்றனர்.

அப்படி இவர் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே அந்த படத்திற்கு பாக்கி இருக்கிறது . வெந்து தணிந்தது காடு படம் இன்னும் முடியாத நிலையில், இந்த படத்திற்கு பிறகு சிம்பு கமிட்டாகி இருக்கக்கூடிய படம் பத்து தல. இந்த படத்திற்கான கால்சீட்டை தாராளமாக சிம்பு கொடுத்திருக்கின்றார்.

இருந்தாலும் வெந்து தணிந்தது காடு படம் மிகவும் தாமதம் ஆவதால் அந்த படம் ரொம்பவே இழுத்துக் கொண்டே செல்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பத்து தல படக்குழு திக்குமுக்காடி நின்றது. இந்த நேரத்தில் பத்து தல படத்தை அந்த படத்தின் எடிட்டர் பிரவீன் ஒரு சிறிய வீடியோவாக எடிட்டிங் வொர்க் செய்து அதை சிம்புவிற்கு அனுப்பியிருக்கிறார்.

அதைப் பார்த்த சிம்பு மிரண்டு போயிருக்கிறார் என்னப்பா இப்படி எடுத்து வச்சு இருக்கீங்க..? வேற லெவல்..! மாஸாக இருக்கிறது என்று கூறி அந்த படத்திற்கு தன்னுடைய கால்ஷீட்டை ஏப்ரல் மாதத்தில் மட்டும் 22 நாட்கள் கொடுத்து படக்குழுவை மிரள செய்து இருக்கிறார். சின்ன வீடியோ அனுப்பி சிம்புவை தட்டி தூக்கிய பத்து தல படக்குழு வெந்து தணிந்தது காடு படத்தை மறந்து போனது.

அந்த படக்குழு மறந்தது போல சிம்புவும் வெந்து தணிந்தது காடு படத்தை மறந்துவிட்டு மொத்தமாக பத்து தல படத்தின் மீது கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதனால் வெந்து தணிந்தது காடு படம் பாதியில் நிற்கிறது . பத்து தல படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வெந்து தணிந்த காடுகள் படத்தின் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு மிகப் பெரிய தாடி வைத்து நடிக்க வேண்டுமாம். அப்படித்தான் கௌதம் மேனன் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறாராம். அதனால் மிகப் பெரிய தாடி வளர்த்து வருகின்றாராம் சிம்பு. இந்த நேரத்தில் இந்த பத்து தல படத்திலும் தாடி மிக அதிகமாக வளர்க்க வேண்டும் என்று கூறியிருப்பதால் இந்த படத்திற்காகவும் தாடியை பராமரித்து வருகிறாராம் சிம்பு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரு முறை தாடி வளர்த்து இரண்டு படங்களிலும் அசத்த இருக்கிறார் நடிகர் சிம்பு.