தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் பகத் பாசில் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்த புகைப்படத்தை வெளியிட்டு யாருக்கும் சொல்லாமல் அப்டேட் கொடுத்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் இணைந்து ஏதோ ஒரு காட்சியில் நடித்துள்ளனர். கண்டிப்பாக இந்த காட்சி திரையரங்கில் ரசிகர்களின் ஆதரவால் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தை புகழ்ந்து தள்ளி வந்தனர்.

காட்டில் எவ்வளவு திறமையான விலங்குகள் இருந்தாலும் சிங்கம் அதனைக் கண்டுகொள்ளாது அதேபோலதான் படத்தில் எத்தனை கதாநாயகர்கள் நடித்திருந்தாலும் அதனை கமல்ஹாசன் பெரிய அளவில் கண்டுகொள்ள மாட்டார். ஏனென்றால் கமல்ஹாசன் தனிக்காட்டு ராஜாவாக தனது நடிப்பு திறமையை பதித்து விடுவார்.

கமல்ஹாசனுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும்
தெலுங்கில் இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். அதனால் தற்போது கமல்ஹாசன் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.

கமல்ஹாசன் பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில் 2 மொழிகளிலும் தனித்தனியாக படங்களில் நடிக்க முடியாது. ஆனால் நீண்ட வருடமாக தெலுங்கு இயக்குனர்கள் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க வேண்டும் என நினைத்து வந்தனர். அதனால் தற்போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் 2 மொழிகளிலும் வெளியாகி பெரிய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் எனவும் கூறி வருகின்றனர்.