ஒரே ஒரு புகைப்படத்தால், இணையத்தை ஆட்டிய சாண்டியின் மச்சினிச்சி.. இப்ப இதுதான் ட்ரெண்டிங்காம்!

பிரபலமான நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர், ஆரம்ப காலகட்டங்களில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக முன்னேறி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்த சாண்டி மாஸ்டர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்  ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே, அவருடைய மச்சினிச்சியான சிந்தியா பற்றி அதிகம் பேசி அவரையும் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தினார் அதன் பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிந்தியா அடிக்கடி தன்னுடைய டான்ஸ் வீடியோவை அப்லோட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் அவருடைய அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிந்தியா. இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஆடிப் போயினர்.

ஏனென்றால் இதில் சிந்தியா தன்னுடைய அம்மாவிற்கு லிப்-டூ-லிப் முத்தம் கொடுத்துள்ளார். சமீப காலமாகவே பிள்ளைகள் அம்மாவுக்கும், அம்மா பிள்ளைகளுக்கும் என லிப்-டூ-லிப் முத்தம் கொடுப்பதை திரைப்பிரபலங்கள் பிரபலங்களிடம் ட்ரெண்டாகி உள்ளது.

முத்தம் கொடுக்கும் போது எடுக்கப்படும் புகைப்படத்தை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்கின்றனர். இதைப் பார்க்கவே நன்றாக இல்லை. அண்மையில் விஜயலட்சுமி தன்னுடைய மகனுக்கு லிப்-டூ-லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பலவித கருத்துக்களை தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து தற்போது சிந்தியாவும் அதையே செய்துள்ளதால் நெட்டிசன்கள் வழக்கம்போல் வச்சு செய்கின்றனர். அத்துடன் சிந்தியா ரசிகர்களும், ஏ’ன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்?’ என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

வலிமை படத்தை 300 கோடிக்கு கேட்ட நெட்ப்ளிக்ஸ்.. போனி கபூர் சொன்ன பதில்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. 3 வருடமாக வலிமை படத்திற்காக இவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் வருகிற பொங்கல் அன்று வலிமை படம் வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் ...