ஒரு பைசா கூட வேண்டாம்.. சமந்தா எடுத்த முக்கிய முடிவு!

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரபல நடிகை சமந்தா, தமிழில் அதர்வாவுடன் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு பிரபல நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு நட்சத்திர தம்பதி இருக்காங்க ஜொலித்தன.

இந்நிலையில் சமந்தா திருமணமாகி நான்கு வருடத்தை கடந்த நிலையில் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டுள்ளார். அத்துடன்  நாகசைதன்யாவின் குடும்பத்தினர் சமந்தாவை நடிக்க வேண்டாம் என்று கூறிய பிறகும் அதைக் கேட்காமல் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருந்ததால், நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கும் சமந்தாவிற்கும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐந்தே நாட்களில் நான்காவது திருமண நாளை கொண்டாட உள்ள இந்த தம்பதியினர் கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் நேற்று அறிவித்தனர்.

இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தற்போது விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யா, சமந்தாவிற்கு 200 கோடி ஜீவனாம்சம் வழங்க முன் வந்ததாகவும் அதை சமந்தா ஏற்க மறுத்துள்ளார்.

ஏனென்றால் நாகசைதன்யாவின் ஒரு பைசா கூட தனக்கு தேவையில்லை என்றும், தன்னுடைய உழைப்பே போதும். அத்துடன் நான் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து நடிப்பேன் என்று சுயமரியாதையுடன் தன்னுடைய விவாகரத்து குறித்து முடிவெடுத்துள்ளார்.

எனவே தற்போது சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து குறித்த செய்தியை வலம் வந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் ஆட்டத்தை சரியாக ஆடும் ஒரே நபர்.. ஓவியாவை மிஞ்சும் ரசிகர் கூட்டம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரசியத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் புதிதாக ...