ஒரு பாடலுக்கு மட்டும் பல கோடி செலவு செய்த ஷங்கர்.. தயாரிப்பாளர் வைத்த செக்

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தில் ராம்சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராம் சரணின் 15வது படமான RC15 படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

RC15 படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படம் 3டி வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது. RC15 படத்தில் எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

ராம் சரணின் இந்த சரித்திர படத்திற்கு இயக்குனர் ஷங்கருக்கு 50 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் RC15 படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் 15 கோடி செலவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே 30 கோடி செலவு செய்துள்ளனர்.

இந்தப் பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலில் சர்வதேச நடனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடி செலவு செய்துள்ளது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

ஷங்கர் சண்டைக்காட்சி மற்றும் பாடலுக்கு மட்டுமே பலகோடி செலவு செய்துள்ளதால் இப்படத்தின் தயாரிப்பாளர் படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் ஷங்கரின் சம்பளத்தை கொடுப்பதாக அறிவித்துள்ளார். அதுவும் எதிர்பார்த்த லாபம் கிடைத்தால் மட்டுமே முழு சம்பளத்தையும் தருவாராம்.

இல்லையெனில் 50 கோடியிலிருந்து 25 கோடி தான் கொடுப்பேன் என தயாரிப்பாளர் கறாராக சொல்லிவிட்டாராம். ஆனால் ஷங்கர் இப்படத்தில் முழுவீச்சில் இறங்கி தீவிரமாக வேலை செய்து வருகிறாராம். RC 15 படம் வெளியான பிறகு முழு சம்பளத்தையும் ஷங்கர் பெறுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.