ஒரு படம் கூட வரல.. அதுக்குள்ள அலப்பறையா? அஸ்வின் பண்ணும் பந்தாவை விளாசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வரும் நடிகராக இருப்பவர் அஸ்வின். இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது அஸ்வின் ஹரிஹரன் இயக்கத்தில் ரவீந்திரன் தயாரிப்பில் ‘என்ன சொல்லப் போகிறாய்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக இன்னும் 2 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் அஸ்வின் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சிலர் வளர்ந்த பிறகும் எதார்த்தமாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் வளர்வதற்கு முன்பு ஓவரா பந்தா காட்டுவார்கள். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யதார்த்தமாக இருந்த அஸ்வின் தற்போது புகழ் மழையில் நனைந்து வருவதால் சமீபகாலமாக பல கண்டிஷன்கள் போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது அஸ்வின் தற்போது ஒரு சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்திற்காக பிஆர்ஓ ஒருவர் முதலில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அஸ்வின் எனக்கு இந்த பிஆர்ஓ வேண்டாம் எனக்குன்னு இன்னொரு பிஆர்ஓ இருக்கிறார். அவர்தான் எனக்கு வேண்டும் எனக் கூறியதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

இதனால் தற்போது சினிமா வட்டாரத்தில் அஸ்வின் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைந்து வருவதாகவும் மேலும் ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை அதற்குள் அடுத்த படத்திற்கு இந்த பிஆர்ஓ தான் வேண்டும் என கண்டிசன் போட்டு வருவது எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா ரசிகர்களை எச்சரித்த நடிகை.. ஒரு அளவுக்கு தான் பொறுமை

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் தற்போது லிகர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படத்திற்கு தற்போது பல நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அவரின் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படத்திற்கும் இது ...