ஒரு தமிழனாய் இருந்துட்டு டாக்டர், டான் என பேரு வச்சு இருக்கீங்க.? நாசுக்காக பதிலளித்த சிவகார்த்திகேயன்.!

லைகா புரோடக்சன்,  அனிருத் இசையில், சிபி சக்ரவர்த்தி திரைக்கதை மற்றும் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு,  ‘டான்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் டைரக்டர் எஸ் ஜே சூர்யா, நடிகர் சூரி, குக் வித் கோமாளி, சிவாங்கி நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் போல் நடித்துள்ளார், கதை கல்லூரியை சுற்றி அமைந்துள்ளது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் டாக்டர், டான் என ஆங்கில டைட்டில்களை கொண்ட வைக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்ட கேள்வி ‘ஏன் உங்க படத்திற்க தமிழில் டைட்டில் வைக்கல.

முதல்ல நானும் திரைப்படத்திற்கு தமிழில் டைட்டில் வைக்கலாம் கேட்டேன், இந்த படத்தோட கதைக்கு டான் என்கிற டைட்டில் தான் சரியா இருக்குன்னு சொன்னாங்க. டான் என்கிற வார்த்தை புழக்கத்தில் உள்ள வார்த்தை தான். இது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு, கதைக்கும் தேவைப்படுது.

தமிழ்ல டைட்டில் வெச்சா மட்டும் தான் தமிழன்னு அர்த்தம் இல்லை நான் தமிழன் என்பது எனக்குத் தெரியும் என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்தார் சிவகார்த்திகேயன். எல்லா மொழிகளிலும் வெளியிடுவதால் இது போன்ற டைட்டில் வைத்தால் தான் மக்களிடம் போய் சென்றடையும் என்பது தான் இவர்களின் எண்ணமாக உள்ளது.