ஒரு காரை வாங்கிட்டு ஷிவானி படும்பாடு.. ஒரு காபி குடிக்க விடுறாங்களா?

விஜய் டிவி பல பிரபலங்களை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அனுப்பியுள்ளது. அப்படி பகல் நிலவு என்ற சீரியல் மூலம் கால்பதித்த ஷிவானி தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

இவர் சீரியல் மூலம் பிரபலமானது விட சமூக வலைதளப் பக்கத்தில் மூலம்தான் அதிகம் பிரபலம். குறிப்பாக இளம் ரசிகர்கள் இவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பார்ப்பதற்காகவே அவரை தொடர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு சமூக வலைதளத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவருக்கு 3 மில்லியன் பாலோஸ்ர்கள் உள்ளனர்.

ஷிவானி சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கினார். இந்த கார் வாங்கிய புகைப்படத்தை வெளியிட்டதிலிருந்து பலரும் ஷிவானி பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளாரா என்ற ஆச்சரியத்தில் இருந்தனர். மேலும் எங்கு சென்றாலும் பிஎம்டபிள்யூ கார் மூலம் தான் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் அப்டேட் வெளியானதிலிருந்து ஷிவானி தொடர்ந்து ரசிகர்கள் படத்தினைப் பற்றிய தகவல்களை கேட்டு வந்தனர். ஆனால் தற்போது அது நேர்மறையாக மாறியுள்ளது.

படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள் தற்போது ஷிவானியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஷிவானி பிஎம்டபிள்யூ காரில் காபி குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் காப்பி கூட வெளியே வந்து குடிக்கமாட்டீர்களா காரில்தான் குடிப்பீர்களா என கலாய்த்து வந்துள்ளனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் பிஎம்டபிள்யூ கார் வாங்கும் அளவிற்கு வாங்கியுள்ள நீங்கள் பேண்ட் வாங்க முடியவில்லையா எனவும் கிண்டல் செய்துள்ளனர்.

இதனை பார்த்த ஷிவானியின் ஆர்மி ரசிகர்கள் சும்மா இருப்பார்களா. உடனே அவர்களது பங்கிற்குகேற்ப எங்க செல்லம் என்ன வேணாலும் பண்ணு அதை ஏன் கேட்கிறீர்கள் என மற்றொரு தரப்பு ரசிகர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அவரது கமெண்ட் பாக்ஸில் இருதரப்பு ரசிகர்களும் மாறி மாறி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிக்காக இறங்கி வந்த ஐஸ்வர்யா.. திமிரு காட்டும் தனுஷ்

நாளுக்கு நாள் தன்னுடைய நிலைமையை பார்த்து தந்தையின் மனது மிகவும் வேதனைப்படுகிறது என்பதை உணர்ந்த ஐஸ்வர்யா மீண்டும் தனுசுடன் வாழ ஓகே சொன்னதுபோல் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஒரு ட்விஸ்ட் கிளம்பியுள்ளது. ...