ஒருவாட்டி வச்ச ஆப்பை இன்னும் எடுக்க முடியல.. கெஸ்ட் ரோலுக்கு ஓகே சொன்ன விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டும்தான். இந்த ஆண்டு இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

ஆக்ஷன் மற்றும் ரொமான்டிக் கலந்து உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது விஜய் சந்தர் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமாகும்.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் சங்கத்தமிழன் என்ற திரைப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் அதிக வசனங்களை வைத்து விஜய் சேதுபதி ரசிகர்களையே வெறுப்படைய செய்தார் இயக்குனர். அதைத்தொடர்ந்து இவர்கள் மீண்டும் கூட்டணி அமைத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி இந்த படத்தில் கெஸ்ட் ரோல் நடிப்பதாக தெரிகிறது. ஹன்சிகாவுக்கு ஜோடியாக சார்பட்டா நடிகர் இணைய உள்ளார். விஜய் சந்தர் படம் ஏற்கனவே தோல்வியை தழுவியதால் விஜய்சேதுபதி நாசுக்காக இந்த படத்தில் இருந்து மெயின் ரோலில் இருந்து ஒதுங்கி விட்டார் போல.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கான பூஜை தற்போது நடைபெற்று உள்ளது. இந்த செய்தியை இயக்குனர் விஜய் சந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

கலைப்புலி தாணு, கே எஸ் ரவிக்குமார், ஹன்சிகா, விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது.