ஒரிஜினல் நாய் சேகர் போஸ்டர் ரிலீஸ்.. ஒரு நாய்க்கு பதில் ஐந்து நாய்களுடன் வடிவேலு

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகரம், படிக்காதவன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சுராஜ் இயக்கத்தில் தற்போது வடிவேலு நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு நாய் சேகர் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

வடிவேலின் முக்கியமான காமெடியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த டைட்டிலுக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.  ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு கத்தி சண்டை என்ற படத்தை எடுத்த சுராஜ் படுதோல்வியைச் சந்தித்தார்.

கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பின் மீண்டும் வடிவேலுடன் கூட்டணி அமைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார். எப்படியாவது இந்த படத்தை வெற்றியடைய செய்துவிட வேண்டும் என்று போராடி வருகிறாராம் இயக்குனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஐந்து நாய்களுடன் வடிவேலு அமர்ந்திருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.