ஒன்னு இருக்கு ஆனா இல்ல, மீரா சோப்ரா ஞாபகம் இருக்கா.? 39 வயதிலும் சிக்குனு இருக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா சோப்ரா. இப்படத்தில் இவர் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பிறகு தமிழில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு சில படங்களில் நடித்தார்.

மீரா சோப்ரா தமிழில் கடைசியாக கில்லாடி எனும் படத்தில் நடித்தார். அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி ஏகப்பட்ட படங்கள் நடிக்க ஆரம்பித்தார். இருப்பினும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் படத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மீரா சோப்ரா கதாநாயகியாக நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால் அதில் ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு கை கொடுத்தது. அதன் பிறகு இவரது படங்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கவில்லை அதனால் சினிமாவை விட்டு சில காலங்கள் விலகி இருந்தார்.

ஆனால் தற்போது ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸ் பிறகு இவருக்கு ஏகப்பட்ட படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் கூடிய விரைவில் பல படங்களில் நடிப்பார் என அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது மீரா சோப்ரா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீரா சோப்ரா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.