ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் இளம் நடிகர்.. மனைவியா இருந்தாலும் வரிசையில் வரசொன்ன தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது புதிய படத்தை இயக்கவுள்ள தகவல்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது பற்றி பலரும் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படம் தனுஷ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது. அதற்கு அடுத்ததாக கௌதம் கார்த்திக்கை வைத்து இயக்கிய வை ராஜா வை திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்த 2 படங்களுக்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா தனுஷ் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.

அதாவது நீண்ட வருடமாக தனுஷுக்காக ஐஸ்வர்யா தனுஷ் ஒரு கதையை ரெடி பண்ணி வைத்திருந்தார். முதலில் இப்படத்தின் கதையை கேட்ட தனுஷ் படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். அதன்பிறகு தனுசுக்கு ஹாலிவுட், பாலிவுட் என பட வாய்ப்புகள் வர கோலிவுட்டை மறந்தார்.

மேலும் ஐஸ்வர்யா தனுஷிடம் படத்தினை பற்றி கேட்டபோது. தற்போது இப்படத்தில் நடிக்க முடியாது ஒரு சில மாதங்களுக்கு பிறகு நடிக்கலாம் என கூறியுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா தனுஷிற்கு தற்போது படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது.

அதனால் தற்போது இளம் நடிகருடன் கைக்கோர்த்த உள்ளதாகவும் இப்படத்தினை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்தின் கதையை சஞ்சீவி என்பவர் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இப்படத்தில் நடிக்க கூடிய நடிகர்களைப் பற்றிய தகவல் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.

தற்போது ஐஸ்வர்யா தனுஷ் படத்தில் பணியாற்றக்கூடிய தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணியிலும், விரைவில் படப்பிடிப்பை நடத்துவதற்காக முதற்கட்ட பணிகள் நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் தற்போது கூடிய விரைவில் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.