ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தனுஷ் மீண்டும் எடுக்கப்போகும் அவதாரம்.. விஜய்டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் மாறன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் தனுஷ் தற்போது புது முடிவு ஒன்று எடுத்துள்ளாராம், நடிப்பை சற்று ஓரம் கட்டிவிட்டு ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக படங்களை இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

தனுஷ் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். அதேபோல் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் வெளியான பவர் பாண்டி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் பிறகு, தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது தனுஷ் மீண்டும் படத்தை இயக்குவதற்கு ஒரு சிறப்பான கதையை வைத்துள்ளாராம். விரைவில் இப்படத்தை இயக்குவதற்காக தனுஷ் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் விஜய் டிவி மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர் மற்றும் ராமர் இருவரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியின் கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இந்த இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளனர். இதனால் இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தற்போது தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பிரச்சனையால் மன அளவில் தனுஷ் மிகுந்த கஷ்டத்தில் உள்ளார். பல்வேறு தரப்பிலிருந்து தனுஷுக்கு பல நெருக்கடிகள் வருகிறது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு வருவதற்காக தனுஷ் தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் தனது கவனத்தை வேறு விதத்தில் திசைதிருப்ப பல யூத்திகளைக் கையாண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் படத்தை இயக்குவது. ஐஸ்வர்யாவும் தனுஷின் 3, கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை படத்திற்கு பின் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தனுசும் களத்தில் குதித்துள்ளார். தனுஷ் முழுவீச்சாக இப்படத்தில் செயல்பட உள்ளார் என கூறப்படுகிறது. விஜய் டிவி பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.