ஐய்யோ சாமி தயவுசெய்து விட்டுரு, நீ மட்டும் வேண்டாம்.. விஜய்யை தெறித்து ஓட வைத்த இயக்குனர்!

இயக்குனர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கக் கூடியவர்தான் நடிகர் விஜய். விஜய்யை வைத்து படம் எடுத்தால் படமும் ஹிட்டாகி விடும். மேலும், அடுத்தடுத்த படங்களில் பெரிய நடிகர்களை இயக்கும், மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று விஜய் பக்கமும் ரஜினிகாந்த், அஜீத் போன்ற பெரிய நடிகர்களிடம் இயக்குனர்கள் தஞ்சம் புகுந்து கொள்கின்றனர். அப்படி தஞ்சம் புகுந்து கொண்ட பிறகு, ஓரிரு படங்கள் என்று விட்டுவிடாமல் தொடர்ந்து பல படங்களை அவர்களை வைத்து எடுத்து, தனது பெயரையும் தங்களின் மார்க்கெட்டையும் அதிகரித்து கொள்கின்றனர்.

அப்படி தன்னுடைய மார்க்கெட்டை அதிகரிக்க தொடர்ந்து பல படங்கள் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என தொடர்ந்து ஹிட் கொடுத்து விஜய்யின் ஃபிட்டான இயக்குனராக வலம் வந்தவர் தான் ஏஆர்.முருகதாஸ். தற்போது விஜய் புது புது இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். விஜய்யும் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் பல படங்களை வித்தியாசமாக தர முயன்று வருகிறார். அப்படி இருக்கும்போது ஏஆர். முருகதாஸ் ஒரு கதையை எழுதி வந்து விஜய்யிடம் கொடுத்தபோது விஜய் கால்ஷீட் கொடுக்க மறுத்து இப்போது வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

விஜய்யும், முருகதாஸும் நண்பர்கள் போல பழகுவார்கள், அடுத்தடுத்த படங்களை ஹிட் கொடுத்தார்களே தற்போது என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது, பெரும்பாலும் முருகதாஸ் படங்கள் என்றாலே ஏதாவது ஒரு பிரச்சனை முளைத்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் பாக்யராஜ் அவர்கள் வெளிப்படையாக இவர் கதையை திருடிதான் படம் எடுத்து வருகிறார் என்று பேசிவிட்டார். அதனால் முருகதாஸ் சம்பாதித்து வைத்த ஒட்டுமொத்த பெயரும் அதில் வீணாய் போனது.

மேலும் இவர் விஜய்யை வைத்து இயக்கிய, சர்கார் படத்தில் தேவையில்லாத அரசியல் ரீதியான வசனங்களும், காட்சிகளும் அவரை அரசியல் ரீதியாகவும் , ஒரு புரட்சியாளராகவும் கருதி அவரை பல நடிகர்கள் புறக்கணிக்கவும் ஆரம்பித்தனர். அப்போது, ஆளும் கட்சியான அதிமுகவை , சர்க்கார் படத்தில் அவர் செய்த செய்கை தான் இன்றுவரை அவரை செய்து வருகிறது.

சர்க்கார் படத்தில் அன்றைய சமயத்தில் ஆளும் அதிமுக அரசு கொடுத்த அம்மாவின் இலவச பொருட்களை தூக்கி தீயில் எறிந்து அதில் நான் புரட்சி செய்யப் போகிறேன் என்ற பெயரில் சில தேவையில்லாத வேலைகளை பார்த்து அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வாங்கிக் கொண்டார். அதனால்தான் சர்க்கார் படம் வெளியாகும் போது எழுந்த பிரச்சினைகளை தீர்க்க எவருமே கைகொடுக்கவில்லை. சர்க்கார் பட பேனர்களை அடித்து நொறுக்கும் அளவிற்கு பிரச்சனை உச்சிக்கு ஏறியது.

இப்படி இருக்கக் கூடிய சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸை விஜய் ஒதுக்கி வருகிறார். இவரை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் பிரச்சனை தான் வரும். ஏற்கனவே நமக்கு இருக்கும் பிரச்சனை ஆயிரம் இருக்கிறது. அதனால் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விஜய் இருக்கிறாராம்.இயக்குனரை முருகதாஸ் சந்தித்து வரும் பல பிரச்சனைகளால் அவரின் மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இப்படியே சென்றால் விலைபோகாத இயக்குனர்கள் லிஸ்டில் இவரும் சேர்ந்து விடுவார் போல.