ஐயப்பனை தரிசனம் செய்த அஜித்தின் 4 புகைப்படங்கள்.. நீண்ட தாடியுடன் மாஸான லுக்

அஜித்தின் வலிமை படம் விமர்சன ரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. இதனை தயாரிப்பு நிறுவனமே ஒப்புக்கொண்டது. அடுத்த படத்திற்கான புதிய கெட்டப்பில் அஜித் தற்போது உலா வருகிறார்.

குருவாயூர் ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருந்த அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நீண்ட தாடியுடன் குருசாமி போல் இருக்கும் அஜித்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

விரைவில் வினோத் இயக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் தற்போது அஜித் வலிமை படத்தில் எழுந்த தவறான விமர்சனங்களை தவிடுபொடியாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

அதற்காக பல முயற்சிகள் செய்து வருகிறார், இதற்காக உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தும் வருகிறார். இதனால் அடுத்த படத்தில் இன்னமும் ஹாண்ட்சம் ஆக இருக்கும் அஜித்தை திரையில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இணையத்தில் வெளிவந்த இந்த புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.