ஐடி கம்பனி பின்னணியில் ஹாரர் திரில்லர்.. கவினின் லிப்ட் விமர்சனம்

அறிமுக இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா நடிப்பில் கொரானா தொற்று துவங்குவதற்கு முன்பே ஷூட்டிங் முடிக்கப்பட்ட பட்ட படம் லிப்ட். இப்படத்தை சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்துள்ளனர்.

கதை – பெங்களுருவில் இருந்து சென்னை ட்ரான்ஸ்பர் ஆகி வருகிறார் கவின். புதிய ஆபிசில் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த அம்ரிதா தான் HR என்பது தெரியவருகிறது. வழக்கமாக செல்கிறது அந்த நாள், எனினும் கவின் கிளம்பும் நேரத்தில் மேனேஜர் புதிய வேலை ஒன்றை கொடுக்கிறார்.

இரவு 10 மணிக்கு முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் கவின் லிப்ட்டில் சில அமானுஷ்யத்தை உணர்கிறார். பார்க்கிங் சென்ற பின்பும் பில்டிங் விட்டு வெளியே செல்ல முடியவில்லை.

செக்யூரிட்டி தற்கொலை செய்வது, காலடி சத்தம் தொடர்வது என படம் செல்லும் நேரத்தில், டாகுமெண்ட் ரூமில் அம்ரிதா மாட்டிக்கொண்டு இருப்பது தெரியவருகிறது. இருவரும் இணைந்து தப்பிக்க முயற்சிக்க, ஒரே இடத்திற்கு திரும்ப திரும்ப வருவது, செத்தாலும் மீண்டும் உயிருடன் வருவது என நம்மை திகைக்க வைக்கிறார் இயக்குனர் .

மூன்று மணிக்கு தாங்கள் இருவரும் நெருப்பில் கருகி இறக்கப்போவதை நியூஸ் சானலில் பார்க்க நேரிடுகிறது.  கம்பனியில் இருப்பது யார் ஆவி என்பதை கண்டுபிடிக்கிறார் கவின், தப்பிக்க திட்டமும் போடுகிறார். உயிருடன் தப்பித்ததா இந்த ஜோடி, ஆவியின் நோக்கம் நிறைவேறியதா என்பதுடன் முடிகிறது கிளைமாக்ஸ்.

சினிமாபேட்டை அலசல்– ஐ டி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனை, அவர்களின் மனஅழுத்தம் போன்ற உண்மை சம்பவங்களுடன் அமானுஷ்யத்தை கலந்து படத்தை தந்துள்ளார் இயக்குனர். படம் ஆரம்பித்த 20 நிமிடத்திற்குள் கதைக்குள் நுழைந்து விடுவது மிகப்பெரிய பிளஸ். பிரிட்டோ மைக்கேல் இசை படத்திற்கு பெரிய பிளஸ். நடிகராக கவின் கலக்கி விட்டார், நடிகனாக ஜெயித்து விட்டார். அம்ரிதாவுக்கு இப்படத்திற்கு பின் கட்டாயம் வாய்ப்புகள் குவியும். ஒரே இரவில் நடக்கும் கதை, அதற்க்கு ஏற்றது போல திரைக்கதையை அமைத்ததனால் படம் போர் அடிக்காமல் செல்கிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – நாம் பார்த்த பல வெளிநாட்டு படங்களின் தாக்கம் தெரிகிறது, எனினும் சிறப்பான முயற்சியே இந்த லிப்ட். பிளாஷ் பேக் பகுதிகள் அந்தளவுக்கு நம் மனதை ஈர்க்கவில்லை என்பது நிஜம் தான், எனினும் அக்மார்க் திகில் படம் இது. திரை அரங்க ரிலீஸ் ஆகியிருக்கும் பட்சத்தில் மல்டி ப்ளெக்ஸ் ரசிகர்களை கட்டாயம் கவர்ந்திருக்கும் இந்த லிப்ட்.

சினிமாபேட்டை ரேட்டிங்  3/5