விஷால், ரீமாசென் நடிப்பில் உருவான திமிரு படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவரின் முரட்டுத்தனமாக நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் விட்ட சவுண்டு இன்று வரை காதில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திமிரு படப்பிடிப்பின் போது இருவருக்குள்ளும் நெருக்கம் உண்டானதாக செய்திகள் கிளம்பியது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்து மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறேன் என அறிவிப்பு வெளியிடுவதைப் போல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. கால்களுக்கு ஜிம் ஒர்க்கவுட் முடித்துவிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. முரட்டுத்தனமாக உள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் உள்ளனர்.