தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்கரவர்த்தியின் ஆஸ்தான நடிகர் தல அஜித். சக்கரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். எஸ் எஸ் சக்கரவர்த்தி அதிகமாக அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் படங்கள்தான் தயாரித்துள்ளார்.

சக்கரவர்த்தி முதல்முறையாக அஜித் மற்றும் ரம்பா நடித்த ராசி படத்தை தயாரித்திருந்தார். அதன்பின், அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த வாலி திரைப்படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரித்திருந்தது. வாலி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், ஜோதிகா இருவரும் நடித்து 2000 இல் வெளியான முகவரி திரைப்படத்தை சக்கரவர்த்தி தயாரித்திருந்தார்.

சிட்டிசன், ரெட், வில்லன் என அஜித், சக்ரவர்த்தியின் கூட்டணி தொடர்ந்து வெற்றி படங்களையே தந்தது. மகாராஜன் இயக்கத்தில் 2003இல் அஜித், மீராஜாஸ்மின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆஞ்சநேயா. இப்படத்தை சக்கரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை.

அதன்பின்பு, ஒரு வருடம் கழித்து 2005இல் லிங்குசாமி இயக்கத்தில் அஜித், திரிஷா இருவரும் நடிப்பில் வெளியான ஜி திரைப்படத்தை சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். ஆஞ்சநேயா, ஜி என இரண்டு படங்களும் தோல்வி அடைந்தது. இதனால் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி சரிவர கணக்கு காட்டாமல் அஜித்தை ஏமாற்றிவிட்டார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித், அசின், கனிகா நடிப்பில் 2006 இல் வெளியான திரைப்படம் வரலாறு. இப்படத்தை சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். வரலாறு படத்தில் அஜித் நடிக்கும் பொழுது சக்கரவர்த்தி ஏமாற்றியது அஜித்துக்கு தெரியவந்தது. தன்னை ஏமாற்றியதை தெரிந்தும் சக்கரவர்த்திகாக வரலாறு படத்தை முடித்துக் கொடுத்தார்.

வரலாறு படம் வெளியிடுவதற்காக அஜித் ஒரு கோடி செலவு செய்துள்ளார். வரலாறு படம் வில்லன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து மிக பெரிய வெற்றியடைந்தது. அதன்பின் எஸ் எஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் அஜித் எந்த படமும் நடிக்கவில்லை.