சமீபகாலமாக யூடியூப் சேனல்கள் பலதும் பழைய நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து அதன்மூலம் நிறைய தெரியாத விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மூலம் டி ஆர் ராஜேந்திரன், சத்யராஜ் படப்பிடிப்பு தளத்தில் கேவலமாக திட்டிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இன்றைய சினிமா துறையில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள், ஆர் டைரக்சன் என தனித்தனியே பல பிரிவுகள் உண்டு. அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் முன்னணியில் இருக்கின்றனர். ஆனால் இவை அனைத்துமே ஒன்று சேர்ந்தாற்போல் இருக்கும் மனிதர் தான் டி ராஜேந்தர். சினிமா உலகின் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட டிராஜேந்தர் தன்னுடைய சினிமா கேரியரில் ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். அதிலும் அவரது படங்கள் ஆயிரம் நாட்களைத் தாண்டி தியேட்டரில் ஓடிய அபூர்வம் நடந்துள்ளது. டி ராஜேந்தரின் சில படங்களில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.

ஆரம்பத்தில் சத்யராஜ் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் வில்லன் நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அதனை தொடர்ந்து ஹீரோவாக சில படங்களில் வெற்றி கண்ட பிறகு முன்னணி நடிகராக வலம் வந்தவர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

அப்படி டி ராஜேந்தர் இயக்கிக் கொண்டிருந்த படத்தில் சத்யராஜ் நடித்துக்கொண்டிருந்த போது இருவருக்குள்ளும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அந்த சண்டைக்காட்சியை ஜூடோ ரத்தினம் என்பவர் படமாக்கி வந்தாராம். சமீபத்தில் ஜீவரத்தினம் பிரபல பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் தான் இந்த சுவாரசியமான செய்தி வெளிவந்துள்ளது.

டி ராஜேந்தர் சண்டைக்காட்சி எடுக்கப்படும் போது வேகமாக சத்யராஜின் வயிற்றில் ஓங்கிக் குத்தி விட்டாராம். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய சத்யராஜ் கோபப்பட்டு ஏன்டா நாயே நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று கூறி திட்டிக்கொண்டே படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பி விட்டதாகவும் அதன் பிறகு சத்யராஜை சமாதானப்படுத்தி அந்தக் காட்சியில் நடிக்க வைத்ததாகவும் ரத்தினம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.