ஏஜென்ட் டீனா அளவுக்கு குத்திக் கிழித்த கண்ணம்மா.. இது என்னட விக்ரம் படத்திற்கு வந்த சோதனை

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பாரதி, கண்ணம்மா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்களும், அப்பாவி மக்களும் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்பதற்கு பாரதி ஒரு பிளான் போட்டு அதில் சொதப்பியதால், தீவிரவாதிகளிடம் வசமாக சிக்கிக் கொண்டார். அவர் சென்ட்ரல் மினிஸ்டரின் ஆபரேஷனை செய்ததால், மீண்டும் தேவைப்படும் என்று தீவிரவாதிகளும் அவரை கொலை செய்யாமல் அடித்துத் துவைத்தெடுத்துள்ளனர்.

Also Read: காளியாத்தாவாக மாறிய கண்ணம்மா.. மானத்தைக் சூறையாடும் அவலம்!

இந்நிலையில் தீவிரவாத கும்பலில் இருக்கும் ஒருவர், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதை அறிந்த கண்ணம்மா, தாமாக முன்வந்து அந்த பொம்பள பொறுக்கி தீவிரவாதியை தனியாக ஒரு அறைக்கு அழைத்து செல்கிறார்.

அது ஸ்டோர் ரூம் என்பதால் அட்மின் ஆபிசராக இருக்கும் கண்ணம்மாவிற்கு அந்த இடத்தில் என்னென்ன இருக்கிறது என்பது தெரியும். ஆகையால் நெருங்கிவரும் அந்தப் பொறுக்கியை கையில் இருக்கும் கத்தியால் குத்திக் கிழிக்கிறார்.

Also Read: பிளான் போட்டு சொதப்பிய பாரதி.. குடும்பத்தையே சிக்கலில் மாட்டிவிட்ட முட்டாள் டாக்டர்

அப்போது விக்ரம் படத்தில் வந்த ஏஜென்ட் டீனா போலவே அவர் நடந்துக்கொண்டது அப்பட்டமாக தெரிந்தது. முன்பு பீஸ்ட் படத்தின் கதையை அப்படியே பின்பற்றிய பாரதி கண்ணம்மா, அதைத்தொடர்ந்து கேஜிஎஃப் படத்தில் யாஷ் ஒரு விதமான துப்பாக்கியால் அனைவரையும் சுட்டு வீழ்த்தி, அதன்பிறகு அதில் இருக்கும் சூட்டினால் தன்னுடைய சிகரெட்டை பற்ற வைப்பார்.

அந்த வகையான துப்பாக்கியை பாரதிகண்ணம்மா சீரியலில் இருக்கும் தீவிரவாதிகள் பயன்படுத்தி, கேஜிஎஃப் படத்தையும் காப்பி அடித்தனர். இப்படி பீஸ்ட், கேஜிஎஃப்-ஐ தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மிரட்டிய விக்ரம் படத்தையும் விஜய் டிவி அட்ட காப்பி அடித்திருப்பதை வைத்து பாரதிகண்ணம்மா சீரியலை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பங்கம் செய்கின்றனர்.

Also Read: 1000 எபிசோடை கடந்த விஜய் டிவி சீரியல்.. 4 வருடங்களாக டிஆர்பி-யில் கலக்கிய தொடர்!

பிக்பாஸ் மேடையில் வாய்ப்பு கேட்ட தயாரிப்பாளர்.. தன்னுடைய பாணியில் பதில் அளித்த ஆண்டவர்

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடிப்பு, அரசியல் என்று பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட ...