ஏகே 61 செட்டெல்லாம் போட்டாச்சு.. ஹாலிவுட் பட கதையை ஹின்ட் கொடுத்த வினோத்

எச் வினோத், அஜித் கூட்டணியில் வெளியான வலிமை படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் இதே கூட்டணியில் அடுத்த படம் ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது. ஏகே 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான செட்டுகள் ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வலிமை படத்தில் பல குறுக்கீடுகளை சந்தித்த வினோத் இந்தப்படத்தில் அப்பேர்ப்பட்ட எந்த ஒரு இடஞ்சளும் இருக்கக்கூடாது என முடிவெடுத்து செம ஜோராக ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். மேலும் இப்படத்திற்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறாராம் வினோத்.

மேலும், வினோத்தின் முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களால் தான் அஜித் வினோத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனால் அந்த மாதிரியான விஷயங்களை செய்து அஜித்தை கவர பெரிதும் திட்டமிட்டுள்ளாராம் வினோத்.

ஐதராபாத்தில் பிரம்மாண்டமான ஒரு பேங்கை செட்டாக போட்டுள்ளனர். இதிலிருந்தே படம் ஒரு பேங்க் சம்பந்தப்பட்ட படம் என்று தெரிகிறது. மேலும் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இதனால் இந்தப் படம் ஒரு பேங்க் ராபரி படமாக இருக்கும் என்று தெரியவருகிறது.

மேலும் ஏகே61 படம் மணி ஹெய்ஸ்ட் என்ற பிரபலமான சீரிஸின் கதைதான் என தகவல் வெளியான நிலையில் தற்போது வங்கிக்கொள்ளை அடிப்படையில் தான் இப்படம் உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த சீரிஸில் இடம்பெற்ற ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

புத்தம்புது காட்சிகளையும், டெக்னிக்குகளையும் கையாள்வதில் ஹெச் வினோத் திறமையானவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால் பேங்க் ராபரியை மையமாக வைத்து எடுக்கப்படும் ஏகே61 படம் ஹாலிவுட் படத்துக்கு நிகராக எடுக்கப்படும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.