எஸ்.ஜே.சூர்யாவின் கைவசம் இத்தனை படங்களா.? அவரே வெளியிட்ட மெர்சலான தகவல்.!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்த வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவரது அறிமுகப் படமே மாபெரும் வெற்றி பெற்றது. முதல் படம் தலயை வைத்து வெற்றி கொடுத்த எஸ்.ஜே.சூர்யா தனது இரண்டாவது படத்தில் தளபதியை வைத்து வெற்றி கொடுத்தார். அப்படம் தான் குஷி.

தளபதி விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் இளைஞர்கள் பலரது ஃபேவரைட் படமாக இப்படம் அமைந்திருந்தது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் வெற்றி பெற்று வந்ததால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்.

தற்போது எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இவர் படங்கள் இயக்குவதை தவிர்த்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இறுதியாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஹீரோ, வில்லன் என்ற பாகுபாடு இல்லாமல் தன்னை தேடி வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. அதை எஸ்.ஜே.சூர்யாவே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “தற்போது ஹீரோவாக இரண்டு படமும், வில்லனாக இரண்டு படமும், ஒரு வெப் தொடர் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக எனது படங்கள் வெளிவர உள்ளன. இதில் முதலில் கடமையை செய் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.