எவ்வளவு சொல்லியும் அடங்காத பாலா.. விவாகரத்தை நிறுத்த போராடிய நடிகர்

சமீபகாலமாக தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருப்பது இயக்குனர் பாலா அவரது மனைவியை விவாகரத்து செய்தது பற்றி தான்.

ஐஸ்வர்யா, தனுஷின் விவாகரத்து செய்தியே இன்னும் முடிவு பெறாத நிலையில் தற்போது பாலாவின் விவாகரத்து செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவரையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

இதற்கு முழு காரணம் யார் என்று கேட்டால் அது நிச்சயம் பாலா மட்டுமே. ஏனென்றால் பாலாவிற்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. அந்தப் பழக்கம்தான் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையில் விரிசல் விழுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பாலா முழுநேர குடிகாரனாக மாறி வீட்டிற்கு வருவதை நிறுத்தி இருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய ஆபிஸிலேயே தங்கி கொண்டு எப்பொழுதும் குடிபோதையிலேயே இருந்திருக்கிறார். இதுதான் அவருடைய மனைவியை இந்த முடிவு எடுக்க வைத்திருக்கிறது.

இவர்களுக்குள் இருக்கும் இந்த கருத்து வேறுபாடை அவர்களின் விவாகரத்துக்கு முன்னரே தெரிந்த ஒருவர் நடிகர் சிவகுமார். அவர் பாலாவுக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ஒரு நல்ல மனிதர். அதனால் அவர் இந்த விவகாரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார்.

பாலாவையும் அவருடைய மனைவியையும் கூப்பிட்டு அவர்கள் மனதை மாற்றும் விதமாக எவ்வளவோ கவுன்சிலிங் செய்து பேசியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் முடிவிலிருந்து மாறவில்லை. அதன்பிறகு சிவகுமாரும் அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டார்.