எளிமைய பற்றி உண்மையைச் சொன்ன ரஜினி.. விஜய்க்கு எதிராக பதில் அடி கொடுத்த ரசிகர்கள்

சில நாட்களுக்கு முன்பு சன் டிவியில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவதையொட்டி அதை விளம்பரப்படுத்தும் விதமாக நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதில் நெல்சன் விஜய்யிடம் அவர் மிகவும் எளிமையாக இருப்பது பற்றி கேள்வி கேட்டார். அதாவது விஜய் படக்குழுவினர் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைத்த போது மிகவும் ஆடம்பரமாக அந்த விருந்து இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இருப்பினும் அந்த விருந்தின்போது விஜய் 100 ரூபாய் பிரியாணியை தான் செலக்ட் செய்ததாகவும், ஷாப்பிங் சென்றால் கூட விஜய்யின் தேர்வுகள் மிகவும் எளிமையாகத் தான் இருக்கும் என்றும் இயக்குனர் நெல்சன் கூறினார். அதற்கு விஜய் எனக்கு மிகவும் எளிமையாக இருப்பது தான் பிடிக்கும் என்று பதிலளித்தார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் எப்படி எளிமையாக இருக்க முடியும் என்று கூறும் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை வைரல் ஆக்கி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.o திரைப்படம் வெளியானது.

அப்போது அவர் மீடியாவுக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவர் எப்படி மிகவும் எளிமையாக இருக்கிறார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி நான் எப்படி எளிமையான ஒரு மனிதராக இருக்க முடியும். என்னிடம் விலை உயர்ந்த கார்கள் இருக்கிறது. நான் வெளியே சென்றால் பிஎம்டபிள்யூ காரில் தான் சொல்கிறேன்.

மேலும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றால் 5 ஸ்டார், 7 ஸ்டார் போன்ற ஹோட்டல்களுக்கு தான் செல்வேன். என் வீடு இருப்பதோ போயஸ் கார்டனில் அப்படி இருக்கும் போது நான் எப்படி சிம்பிளாக இருக்கிறேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

ஒருவேளை என்னுடைய, உடையை பார்த்து அப்படியே கூறுகிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் எளிமையான ஆள் கிடையாது என்று அனைவரும் வியக்கும் வகையில் ஒரு பதிலை கொடுத்தார். தற்போது விஜய் கொடுத்த அந்த பேட்டிக்கு பதில் அளிக்கும் விதமாக ரஜினிகாந்த் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.