எல்லோருடைய டார்கெட்டும் கமல்தான்.. அசராமல் நின்னு அடிக்கப்போகும் ஆண்டவர்

தமிழ் சினிமாவில் உலக நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பல்வேறு பன்முகத் திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர்தான் கமலஹாசன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பத்து இயக்குனர்களாவது கமல் ஆபீஸ்-க்கு படையெடுக்கிறார்கள்.

கமல் அரசியலில் இருந்து தற்போது விலகி சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸாகவுள்ளது.

மேலும் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தூசி தட்டிய தற்போது கையில் எடுத்திருக்கிறார். அதன் வாயிலாக பல படங்களையும் தயாரிக்க பெரிய திட்டம் ஒன்றை பெற்றிருக்கிறார். இதனால் தினமும் பத்து இயக்குனர்களையாவது கமல் ஆபீஸில் பார்க்கலாம்.

ஏற்கனவே கமல், பா ரஞ்சித் உடன் இணையும் ஒரு கூட்டணி தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது மாரி செல்வராஜ் 4, 5 முறை கமல் ஆபிசுக்கு சென்று வந்துள்ளார். அதனால் கூடிய விரைவில் இவர்களது காம்போவை எதிர்பார்க்கலாம்.

மாரி செல்வராஜ் கமலிடம் ஒரு கதை சொல்லி, அந்த கதை ரொம்ப பிடித்துப்போக கமல் அந்தப்படத்தை பண்ணுவதாக சொல்லி இருக்காராம். இதில் இவர் நடிக்கப் போகிறாரா இல்லையா அல்லது இவர் பேனரில் தயாரிக்க இருக்கிறாரா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

எது எப்படியோ கமல் அரசியலில் புகுந்தது பிடிக்காமல் இருந்த ரசிகர்களுக்கு இது நல்ல விஷயமாகவே தெரிகிறது. அத்துடன் கமலை வைத்து அரசியல் பின்னணியை வலுவாக பேசக்கூடிய படத்தை உருவாக்கும் முயற்சியில் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் தீவிர முனைப்பு காட்டுகின்றனர்.