எல்லா சீசனிலும் ஒரே பார்முலாவை பின்பற்றும் பிக்பாஸ்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஒரே மாதிரியான டெக்னிக்கை தமிழ் பிக் பாஸ் குழுவினர் பின்பற்றி வருகின்றனர். தங்களது டிஆர்பி ரேட்டிங்காக ஒவ்வொரு சீசனிலும் ஒரு இளம் ஜோடிகளையும், அவர்களிடையே நிலவும் ரோமன்ஸ் காட்சிகளும் மற்றும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் விதமாக மோதல்களில் ஈடுபடக் கூடிய ஒரு சில கதாபாத்திரங்களையும் களமிறக்கி நிகழ்ச்சியை ஏகபோகமாக ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் போட்டியாளர்களை தேர்வு செய்வதிலும் ஒரே பார்முலாவை பிக்பாஸ் குழுவினர் பயன்படுத்துகின்றனர்.

ஏனென்றால் பிக் பாஸ் சீசன்4ல் விஜய் தொலைக்காட்சியின், சரவணன் மீனாட்சி என்ற நெடுந்தொடரில் நடித்த சின்னத்திரை நடிகர் ரியோ பிக்பாஸ் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் தற்போது பிக் பாஸ் சீசன்5ல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகர் ராஜு இந்த சீசனின் போட்டியாளராக தேர்வாகியுள்ளார்.

அதேபோல் ஆங்கரிங் நட்சத்திரங்களில் பிரபலமடைந்த அர்ச்சனா, பிக் பாஸ் சீசன்4ல் போட்டியாளராக இருந்தார். அவரைப்போலவே பிக் பாஸ் சீசன்5ல் விஜய் தொலைக்காட்சியின் VJ பிரியங்கா போட்டியாளராக தேர்வாகி இருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன்4ல் அறந்தாங்கி நிஷா இடம்பெற்றிருந்தார். அதேபோல் பிக் பாஸ் சீசன்5ல் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு போட்டியாளராக இருக்கிறார்.

அத்துடன் பிக் பாஸ் சீசன்4ல் வேல்முருகன் என்றால், பிக் பாஸ் சீசன்5ல் இமான் அண்ணாச்சி இடம் பெற்றிருக்கிறார். அதேபோல் பிக் பாஸ் சீசன்4ல் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போட்டியாளரான நடிகர் ஆரி அர்ஜுன் சென்ற சீசனில் இடம் பெற்றிருந்தார். இந்த சீசனில் அபினய் போட்டியாளராக இருக்கிறார்.

இவர்களைப் போலவே சென்ற சீசனில் மாடல் ரேஷ்மா, தற்போது பிக் பாஸ் சீசன்5ல் நதியா சாங் இடம் பெற்றுள்ளார். இவை அனைத்தையும் பார்க்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படக் கூடிய போட்டியாளர்கள் ஒரே மாதிரியான டெக்னிக்கை பின்பற்றி தேர்வு செய்யப்படுகின்றனர் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

எனவே பிக் பாஸ் சீசன் 5ல் உள்ள போட்டியாளர்கள், ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 4ல் உள்ள போட்டியாளர்கள் போலவே உள்ளதால், சென்ற சீசனை போல தான் இந்த சீசனும் நகரும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விருமன் இத்தனை படத்தின் காப்பியா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், கருணாஸ், சூரி, மைனா நந்தினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துயுள்ளது. ...