எல்லாமே பறி போயிருச்சு.. பகிரை கிளப்பிய ஆர்யா மனைவி சாயிஷா!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இணைந்த ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்துகொண்ட பிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சாயிஷா கர்ப்பமான பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அவருக்கு இந்த ஆண்டில் ஜூலை 23ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. எனவே குழந்தை பிறந்ததற்கு பிறகு சாயிஷா படத்தில் நடிப்பதற்கான சுதந்திரம் பரிபோனது என்றும், படத்தில் நடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம்.

ஆகையால் மீண்டும் புது மாற்றத்துடன் சினிமாவில் நுழைந்து தன்னுடைய மார்க்கெட்டை நிலைநிறுத்துவதற்கு விதவிதமான போட்டோ ஷூட்களை ஆர்யா மனைவி சாயிஷா நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் சாயிஷாவிற்கு குழந்தை பிறந்த பிறகு, சினிமாவில் நடிப்பதற்கான நேரம் குறைந்திருப்பதாகவும், குழந்தையை பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறதாம்.

எனவே இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்ட சாயிஷா, படத்தில் நடிப்பதா! குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதா! என இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய சூழலில், ‘மதில் மேல் நிற்கும் பூனைபோல்’ எந்தப் பக்கம் தேர்வு செய்வது என குழப்பத்தில் இருக்கிறாராம்.

பொதுவாக சினிமா நடிகைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது சகஜம்தான். அதனாலே திருமணமான நடிகைகளின் சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலை ஏற்படும். அதனால் சாயிஷா இதை சமாளித்து சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.