எலும்பும் தோலுமாய் ஆளே மாறிய பவானி ரெட்டி.. பாதி முடியுடன் வைரல் புகைப்படம்

ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமான பவானி ரெட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாச காட்சியில் நடித்த பவானி ரெட்டியின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பவானி ரெட்டி தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகரான பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஒரு வருடத்திற்கு உள்ளேயே பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பவானி ரெட்டி தன்னுடைய உறவினர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்ற தகவல்களும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பவானி ரெட்டி பங்கேற்க விஜய் டிவி அவரை அணுகி உள்ளதாகவும், அதற்கு பவானி ரெட்டி ஒப்புதல் தெரிவித்ததாகவும் அண்மையில் தகவல்கள் கசிந்து வருகிறது.

தற்போது பவானி ரெட்டி மொட்டை மாடியில் காற்று வாங்கும் படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பவானி ரெட்டி பதிவிட்டுள்ளார். இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் சிலர், ‘பவானி ரெட்டியை பிரியா ஆனந்த் போல் இருக்கிறீர்கள்’ என்ற நேர்மறையான கருத்துக்களை பதிவிடுகிறனர். அதில் ஒரு ரசிகர், ‘நாய் மிச்சம் வச்ச எலும்பு’ என்று அந்தப் புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்துள்ளார்.

அத்துடன் இவர் பிக்பாஸில் கலந்துகொள்ள போகிறாரா இல்லையா என்ற ஆர்வத்தில் பவானி ரெட்டி இடமே, அந்தக் கேள்வியை சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் எழுப்புகின்றனர். இருப்பினும் அதற்கு பதில் அளிக்காமல் பவானி ரெட்டி மௌனம் சாதிக்கிறார்.