பொதுவாக இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன் களிலும் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் மக்கள் அளித்த குறைந்த வாக்கின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதன் பிறகு புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் இருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள்.

ஆனால் நடந்த முடிந்த பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக களமிறங்கினார். அதேபோன்று தற்போது மீண்டும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் வெளியேறிய அபிஷேக் ராஜா தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

எனவே இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா மற்றும் அபிஷேக் ராஜா இருவர் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் மட்டும் ஏன் இந்த கூடுதல் சலுகை என்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருந்த போதும், அதற்குப் பிறகும் பெரிய மாற்றம் ஏற்படுத்தி இருக்கலாம்.

பொதுவாக வனிதா மற்றும் அபிஷேக் இருவரும் கன்டன்ட் கொடுக்கும் கன்டஸ்டன்ட்ஸ் என்பதால் அவர்கள் செய்வது சரியா தவறா என்பதை விட அவர்கள் இருந்தால் நிகழ்ச்சி காரசாரமாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்பி இருக்கலாம்.

அதற்காகவே வனிதா, அபிஷேக் போன்ற போட்டியாளர்களை மீண்டும் தரையிறக்கி தங்களது டிஆர்பி ரேட்டிங்கை பிக்பாஸ் குழுவினர் எகிற விடுகின்றனர். இப்படி விஜய் டிவி போட்ட கணக்கு வெற்றி பெறுமா என்று பிக் பாஸ் நிகழ்ச்சி போகப்போக தெரியவரும்.

எனவே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிஷேக் ராஜா பழைய படி தன்னுடைய ஆட்டத்தை ஆடுவாரா? இல்லை வெளியே சென்று வேண்டியதை கற்றுத் தெரிந்து கொண்டு வேறொரு கோணத்தில் பிக்பாஸ் விளையாட்டை விளையாடுவாரா? என்பதை இனி வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.