எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய கண்ணன்.. கொழுந்து விட்டு எரியும் மீனா!

கடந்த வாரம் டாப் 10 சீரியல்களில் முதலிடத்தையும், டிஆர்பி இல் அதிக ரேட்டிங்கையும் பெற்று வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல நேர்மறையான விஷயங்களை எதார்த்தமாக வெளிக்காட்டும் ஒரு கூட்டுக் குடும்பக் கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் மேலும் விறுவிறுப்பை மெருகேற்ற பல திருப்பங்களை வைத்திருக்கின்றனர். ஏற்கனவே குடும்பத்தில் தனத்தின் குழந்தை புதிதாக வந்த உடன் கயலை யாரும் கண்டுகொள்ளவில்லை என கவலையில் இருக்கிறார் மீனா.

மேலும் தனத்திடம் இது குறித்து கேட்டு சண்டையும் போடுகிறார். கயலை நீங்க முன்பு போல் பார்த்துக் கொள்வதில்லை உங்கள் குழந்தையை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள் என வார்த்தைகளால் வசை பாடுவது போல வரப்போகும் எபிசோடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் தனத்தின் குழந்தையை பார்க்க வேண்டும், அந்தக் குழந்தையை ஒரு முறையாவது கையில் ஏந்த வேண்டும் என கண்ணன் தனது ஆசைகளை ஐஸ்வர்யாவிடம் கூறி வருகினான்.

இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் உள்ளவர்களிடம் பேச ஆரம்பிக்கும் கண்ணன். ஏற்கனவே காண்டாக இருக்கும் மீனாவிடம் தனத்தின் குழந்தையை தூக்க வேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தி, கண்ணன் பாண்டியன் ஸ்டோர் வீட்டில் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுகிறார்.

எனவே பல்வேறு திருப்பங்கள் நிறைந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த வாரம் விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.