எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இணைந்து பணியாற்றிய படங்கள்.. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம்

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவான்கள் என அழைக்கப்படுபவர்கள் மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா. இவரது இசையில் வெளியான பாடல்களும் படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அப்போதெல்லாம் படத்திற்கு இசையமைப்பாளர்கள் என்றால் இயக்குனர்களுக்கு ஞாபகம் வருவது எம்எஸ் விஸ்வநாதனும், இளையராஜாவும் மட்டும்தான்.

ஆரம்பத்திலிருந்து இணைந்து பணியாற்றிய கலைஞர்கள் நாளடைவில் தனித்தனியாக பிரிந்து படங்களில் பணியாற்ற தொடங்குவார்கள். அப்படித்தான் எம்எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இருவரும் தனித்தனியாக படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தனர்.

ஆனால் இவர்கள் இருவரும் இசை பணியில் மட்டும் தனித்தனியாக கவனம் செலுத்தினர். எம்எஸ் விஸ்வநாதன் இயக்கத்தில் வெளியான பாடல்கள் இன்று வரை ரேடியோவில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதேபோல்தான் இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் தற்போதுவரை அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.

தனித்தனியாக வெற்றிகண்ட எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு சில படங்களில் பணியாற்றி உள்ளனர். முதன்முதலில் ‘மெல்லத் திறந்தது கதவு’ என்ற படத்தின் மூலம் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

அதன்பிறகு செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன், இரும்பு பூக்கள் மற்றும் விஷ்வ துளசி போன்ற ஒரு சில படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். என்னதான் இவர்கள் இருவரும் தனித்தனியாக இசையமைத்து வந்தாலும் இவர்களது நட்பு என்னமோ ஒற்றுமையாக தான் இருந்துள்ளது.