எம்ஜிஆர், சிவாஜி இருவருக்கும் மிகச் சரியான ஜோடி.. பழம்பெரும் நடிகைக்கு கிடைத்த கௌரவம்

60,70 களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி. தற்போது வரை இந்த இரு நடிகர்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் ஒரு நடிகரை தமிழ் சினிமா இன்னும் பார்க்கவில்லை. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி இந்த இரு நடிகர்களுடனும் அதிகப் படங்கள் ஜோடியாக நடித்த தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை.

அந்த காலகட்டத்தில் இந்த இரு நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்க நடிகைகளுக்குள் பயங்கரப் போட்டி நிலவுமாம். மேலும் அந்த நடிகைக்கு அக்ரிமெண்ட் போட்டுவிட்டால் குறைந்தது மூன்று அல்லது நான்கு வருடங்கள் பணியாற்றும்படி தான் அந்த அக்ரிமெண்ட் போடுவார்களாம்.

அப்படி எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த ஒரு நடிகை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி சரோஜாதேவி தான். 1958ல் இருந்த 1967 வரை கிட்டத்தட்ட 25 படங்கள் எம்ஜிஆருடன் இணைந்து சரோஜாதேவி நடித்துள்ளார்.

நீதிக்குப் பின் பாசம், பெரிய இடத்துப் பெண், திருடாதே, நான் ஆணையிட்டால், எங்க வீட்டுப் பிள்ளை, பணக்கார குடும்பம், பறக்கும் பறவை போன்ற பல வெற்றிப்படங்கள் இதில் அடங்கும். இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடனும் சரோஜாதேவி பல படங்களில் நடித்துள்ளார். பாலும்-பழமும், பாகப்பிரிவினை, ஆலயமணி, வளர்பிறை, கல்யாணியின் கணவன், ஒன்ஸ்மோர் என 20 படங்களுக்கு மேல் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் ஹீரோயின் என்றாலே சரோஜாதேவி தான் என்ற கௌரவத்தோடு சூட்டிங் ஸ்பாட்டில் வலம் வந்தார் சரோஜாதேவி. மேலும் இவருக்கு சிவாஜியின் 92வது பிறந்த நாள் விழாவில் டாக்டர் சிவாஜி கணேசன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.