எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த ஒரே நடிகர்.. இவருக்கு மட்டுமே அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமாவின் இரு தூண்களாக கருதப்படுபவர்கள் நடிகர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன். இவர்கள் மறைந்து பல ஆண்டுகள் கடந்தும் தமிழ் சினிமாவை பற்றி இப்பொழுதும் பேசும் போது இவர்களை ஒதிக்கிட முடியாது. அவ்வாறாக அவர்கள் இருவரும் ஆற்றிய கலைப்பணி மிகப்பெரியது.

இவர்கள் இருவருடனும் இணைந்து ஏதாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர்கள் ஆசைப்பட்டு உள்ளனர். அது அவர்களின் சம கால நடிகர்கள் சிலருக்கு நிறைவேறியது. எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் வாதியாக மாறி பின்னர் முதல்வரும் ஆனார். சிவாஜி அவர்கள் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்தார். இவர்கள் காலத்திற்கு பிறகு நடிக்க வந்த நடிகர்களும் இவர்களுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டனர். ஆனால் அந்த வாய்ப்பு ஒருவருக்கு மட்டுமே அமைந்தது.

எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின்னர் திரைக்கு வந்த ரஜினிகாந்த் சிவாஜியுடன் இணைந்து ஐந்து படங்களில் நடித்துள்ளார்.”படிக்காதவன்”, “நான் வாழ வைப்பேன்”, “விடுதலை”, “ஜஸ்டிஸ் கோபிநாத்” மற்றும் “படையப்பா” என திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அவரால் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஒரு முறைக்கூட நடிக்க முடியாமல் போயிற்று.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல பரிமாணங்களில் வெற்றி கண்டவர் கமல்ஹாசன். சிறுவயதில் சிவாஜியுடன் இணைந்து கமல்ஹாசன்”பார்த்தால் பசி தீரும் என்ற படத்திலும் வளர்ந்த நாயகனான பிறகு “நாம் பிறந்த மண்”, “தேவர் மகன்” போன்ற படங்களில் இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆருடன் சிறுவயதில் கமல் “ஆனந்த் ஜோதி” என்னும் திரைப்படத்தில் நடித்தார். வளர்ந்த பிறகு அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் ரஜினி போன்ற மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கமல்ஹாசனுக்கு கிடைத்தது. அந்த வகையில் கமல்ஹாசனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் இணைந்து “உருவங்கள் மாறலாம்” என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் சிவாஜியுடன் “தாவணி கனவுகள்” படத்தில் நடித்த பாக்கியராஜ், “அவசர போலீஸ் 100” என்ற படத்தில் எம்.ஜி.ஆர் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.