எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்து இவர்தான்.. ரெண்டு பேரை விடவும் முரட்டாக நடிக்கும் நடிகர்

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் என்றால் முதலில் தியாகராஜ பாகவதர் மற்றும் பி யு சின்னப்பா என்றுதான் கூறுவார்கள். அதற்கு அடுத்து எம்ஜிஆர், சிவாஜி என்று காலம் மாறியது. இவரது காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி தவிர பெரிய அளவில் படத்தின் வெற்றியும் ரசிகர்களின் வரவேற்பும் யாரும் பெறவில்லை என பலரும் கூறி வந்தனர். ஆனால் அது உண்மையில்லை.

இவர்களது கால கட்டத்தில் ஏராளமான நடிகர்கள் தனக்கென தனி பாணியை உருவாக்கி பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைபெற்றனர். அப்படி தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் ஓ ஏ கே தேவர்.

ஓ ஏ கே தேவர் திகம்பர சாமியார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த காலத்தில் ஹீரோ குணச்சித்திர நடிகர் என்றெல்லாம் கிடையாது. படத்தில் யார் நடிப்பு திறமையை நிரூபிக்கிறார்கள் அவர்களை ஹீரோக்களாக ரசிகர்கள் கருதுவார்கள்.

அப்படி தனது உடல் பாவனை மற்றும் கர்ஜிக்கும் குரல் மூலம் தனது திறமையை நிரூபித்தவர் ஓ ஏ கே தேவர். அதுவும் இவருக்கு கிடைத்த பெரிய பரிசு என்றால் இவருடைய கர்ஜிக்கும் குரல் தான். ஏனென்றால் இவர் பேசும் வசனங்கள் கர்ஜிக்கும் குரல் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். அப்போதெல்லாம் திறமையான நடிகர்கள் பட்டியலில் இவருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

இவரது நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் பிள்ளை செல்வம். இவரது மகனான ஓ ஏ கே சுந்தர் சினிமா துறையில் நடிகராக பல படங்கள் நடித்துள்ளார். இவர் முதலில் நாடோடி பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்கள் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். ஆனால் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

வேண்டவே வேண்டாம் விட்டுவிடுங்கள் என ஒதுங்கிய தமன்னா.. வாரிக் கொடுக்கும் வள்ளலே துணை

தென்னிந்திய சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. இவர் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஷன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு தமிழில் ...