எப்பா நெல்சா, ஹீரோயின் மட்டும் நான் சொல்றேன்.. ரஜினி போட்ட கண்டிஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. படம் வெளியானபோது கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூலில் எந்த வித குறையும் இல்லை. போதாக்குறைக்கு சன் டிவியில் ஒளிபரப்பிய போதும் படம் டிஆர்பி-யில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

அந்த நம்பிக்கையில் மீண்டும் ரஜினியுடன் கைகோர்த்து உள்ளது சன் பிக்சர்ஸ். மேலும் இந்த முறை தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் இயக்குனராக இருக்கும் நெல்சன் திலீப்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நெல்சன் தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்காக அதிரடி ஆக்ஷன் கதையை உருவாக்கியிருக்கும் நெல்சன் படத்திற்கான ஹீரோயினை தேடும் பணியில் இறங்கியுள்ளார். ஆனால் இந்த முறை ஹீரோயின் விஷயத்தில் ரஜினியின் தலையீடு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அதற்கு காரணமும் இருக்கிறது.

ரஜினிக்கு தற்போது வயது 70 தாண்டி விட்டதால் இளம் நடிகைகளை ஜோடி போட்டால் அதுவே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனமாக அமைந்துவிடும் என்பதால் ஓரளவுக்கு வயதுள்ள நடிகைகளை தனக்கு ஜோடியாக போடும்படி கேட்டுள்ளாராம். அந்த வரிசையில் நயன்தாரா சிம்ரன் மீனா குஷ்பு போன்றோர் ஜோடி என்றால் ஓகே என்கிறாராம் ரஜினி.

இருந்தாலும் கதைக்கு தேவையான ஹீரோயின் யார் என்பதை நெல்சன் தானே முடிவு செய்ய வேண்டும். நெல்சனும் ரஜினியின் முடிவை ஏற்று அவரது வயதை சரிசெய்யும் வகையில் ஹீரோயினை ஓகே செய்துவிடலாம் என நம்பிக்கை கொடுத்துள்ளாராம்.