என் வெற்றிக்கு காரணம் குடித்தான்.. கேஜிஎஃப்-2 பட இயக்குனரின் அசத்தலான பதில்!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கேஜிஎஃப் 2  திரைப்படம். இந்தப் படம் கடந்த 14 ஆம் தேதி அன்று உலகெங்கும் ரிலீஸாகி தற்போது ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் மூலம் பிரசாந்த் நீல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். கேஜிஎஃப் 2 படத்தின் பிரஸ்மீட்டில் பிரசாந்த் நீல் இடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது தொகுப்பாளர் பிரசாந்த் நீல் இடம் எப்படி கதை எழுதினீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு பிரசாந்த் நீல் குடித்த பிறகுதான் நான் கதை எழுதுவேன். அடுத்தநாள் நிதானமாக இருக்கும்போது அதைப் படித்துப் பார்ப்பேன். அது எனக்கு பிடித்து இருந்தால் அதை வைத்து திரைக்கதை எழுதுவேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட சிலர், குடித்த நிலையில் தான் இப்படி எல்லாம் வெறித்தனமாக யோசித்து எழுதியிருக்க முடியும். படத்தின் ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமாக காட்சி படுத்தியதற்கு இதுதான் காரணமா என்றும் பிரசாந்த் நீல்லை குறித்து கமெண்ட் செய்கின்றனர்.

அத்துடன் ரசிகர்கள் பலரும் ஓஹோ கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றிக்கு காரணம் குடிதான் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் இந்த உலகில் யார்தான் குடிக்கலாம் இருக்கிறார்கள்.

முன்புதான் இதனைப் பற்றி பேசுவதற்கு பலரும் தயங்குவார்கள். தற்போது அனைவருமே குடிப்பதால் இந்த விஷயம் எல்லாம் யாரும் தற்போது பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என கூறி வருகின்றனர்.