சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் VJ பார்வதி. இவர் வளவளன்னு பேசிட்டு போட்டியாளர்களை மட்டுமல்லாது மக்களையும் எரிச்சல் படுத்தினார். இதனால் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானார்.

இவரின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் இவரை அடுத்த  ஜூலி என்று கலாய்த்து வந்தனர். சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள பார்வதி தற்போது தன்னை பற்றி வந்த செய்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.

தன்னை அடுத்த ஜூலி என்று கலாய்த்தவர்களுக்கு ஜூலியை பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. என்னை கேலி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் என்னை மற்றவருடன் ஒப்பிட்டு கம்பேர் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் நான் சரியான உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்தேன். வெறும் அடிப்படை வசதிகள் மட்டுமே எங்களுக்கு அங்கு செய்து தரப்பட்டு இருந்தது. சரியான தூக்கமும், கழிப்பறை வசதிகளும் கிடையாது.

அதனால் என்னுடைய மன நிலையும், உடல் நிலையும் வேறாக இருந்தது. அதை வைத்து ஒருவரை நீங்கள் முடிவு செய்யாதீர்கள் என்றும், நான் நானாகவே இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு தன்னை பற்றி வந்த கிண்டல்களுக்கு பார்வதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தன்னை ஜூலியோடு இணைத்து பேசுவதை தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.