என்ன அண்ணாச்சி இப்படி பண்ணிட்டீங்க எனக்கேட்ட சீமான்.. இனப்பிரச்சினையை இப்படியா தூண்டுவது

தற்போதெல்லாம் பணம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் நடிகர்களாக மாறி விடலாம். அந்த அளவிற்கு பலரும் தங்களது சொந்தப் பணத்தைப் போட்டு படங்களில் நடித்து வருகின்றனர். சரவணா ஸ்டோர் அண்ணாச்சி முதலில் தனது கடையின் விளம்பரங்களுக்கு நடித்து வந்தார்.

அதன் பிறகு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தற்போதும் தனது முழு பணத்தையும் செலவிட்டு ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இலங்கை பாடகியான யாகாணி என்பவரை சரவணா ஸ்டோர் அண்ணாச்சி படத்தில் பாடவைத்தார்.

அதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது எப்படி தமிழர்களை கொன்று குவித்த ராணுவத்தின் பெண்ணான பாடகியாக யாகாணியை எப்படி தமிழில் பாட வைக்கலாம் என கேட்டு வந்தனர். மேலும் தற்போது வேண்டுமானால் அமைதியாக இருப்போம் படம் வெளியாகும்போது இதனால் பெரிய பிரச்சினை சந்திப்பீர்கள் என பலரும் சரவணன் ஸ்டோர் அண்ணாச்சியிடம் கூறியுள்ளனர்.

இதனைப்பற்றி சீமான் என்ன அண்ணாச்சி இப்படி செஞ்சுட்டிங்க இலங்கை பாடகியை உங்கள் படத்தில் பாட வச்சிருக்கீங்க என கேள்வி கேட்டுள்ளார். அதுக்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி எனக்கு எதுவுமே தெரியாது சீமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலுக்கு இலங்கைப் பெண்ணை பாட வைக்கலாம் என்று மட்டும்தான் கூறினார். இதனால் நானும் எதார்த்தமாக சரி என ஒப்புக் கொண்டேன்.

ஆனால் அது இவ்வளவு பெரிய பிரச்சினை வரும் என்று தெரியாது. தற்போது அந்த பாடலை முழுவதுமாக நீக்கி விட்டோம் என கூறியுள்ளார். மேலும் அந்த பாடலை வேறு ஒருதமிழ் பாடகியை பாட வைத்துள்ளதாகவும் இப்பாடல் காட்சிகளை எடுக்க ரஷ்யாவிற்கு படக்குழு சென்றுள்ளதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

டாப் 10-ல் மூன்று இடங்களை பிடித்த அண்ணாத்த.. ரஜினிக்கு நிகர் ரஜினியே

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறந்த குடும்ப திரைபடமான இப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ...