என்னை பார்த்து பயந்து நடுங்கும் திரையுலகம்.. நான் ஒரு போலீஸ் என பயில்வான் தெனாவட்டு

தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது பயில்வான் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதன் மூலம் இவர் நிறைய காசு பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் கிசுகிசுக்கள் மற்றும் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலம் பயில்வான் சொல்லி வருகிறார்.

இதனால் இவரது சேனலை பலர் பின்தொடர்கின்றனர். ஆனால் ஒருபக்கம் பயில்வான் மீது சினிமா பிரபலங்கள் பலர் கோபத்தில் உள்ளனர். மேலும் இதை தடுக்க பல முயற்சிகள் செய்துள்ளனர். ஆனால் யாருமே என்னை அடக்க முடியாது என தொடர்ந்து பல்வேறு கிசுகிசு செய்திகளை பயில்வான் வெளியிட்டு வருகிறார்.

நடிகை கஸ்தூரி, ராதிகா என பலர் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவை பற்றி ஒரு தகவல் கூறியிருந்தார். அதாவது நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லை எனவும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத் தாய் மூலம் தான் பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி ஆகியோரும் வாடகை தாய் மூலம் தான் பெற்றார்கள் என கூறியிருந்தார். இந்த செய்தி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நயன் ரசிகர்களால் பல கடுமையான விமர்சனங்களால் பயில்வான் தாக்கப்பட்டார்.

இந்நிலையில் சினிமாக்காரர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் அவர்கள் குடும்பம் என் கையில்தான். நான் சொல்வது பொய்யாக இருந்தால் அவர்கள் என்னிடம் தைரியமாக சண்டைக்கு வரலாம் மாறாக உண்மையாக உள்ளதால் என்னை எது வும் அவர்களால் செய்ய முடியவில்லை.

மேலும், பல நடிகைகளின் அந்தரங்க செய்திகள் எல்லாம் என் கையில்தான் உள்ளது. அதனால்தான் நான் தைரியமாக உண்மையை சொல்கிறேன். இதனால் தான் என்னை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று தெனாவட்டாகவும், திமிராகவும் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.