என்னுடைய பொண்டாட்டி கண்ணம்மா தான்.. வெண்பாவை உதறி பேசிய பாரதி!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நாள்தோறும் திடீர் திருப்பங்களுடன் விறுவிறுப்பையும் தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த விதமாக இன்றைய எபிசோட் மக்களுக்கு பல இன்ட்ரஸ்டிங் விஷயங்களை தந்துள்ளதை ப்ரோமோவில் காட்டி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது பாரதியா எனக் கேட்கும் அளவிற்கு கண்ணம்மாவைப் பெருமைப்படுத்தி, வெண்பாவை நன்றாக சானிய முக்கி செருப்பில் அடித்தது போல் வெளுத்து வாங்கி அசிங்கப்படுத்தி இருப்பார்.

பாரதியின் செல்போனை கொடுக்க பாரதி வீட்டிற்கு கண்ணம்மா வர அங்கு வந்த வெண்பா அவளைப் பார்த்துக் காண்டாக, போதாத குறைக்கு கண்ணம்மாவும் வெண்பாவை ஜாடைமாடையாக வெறுப்பேத்த, இதை உணர்ந்த பாரதி இதுக்குமேல இங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என அறிந்து வெண்பா உடன் நைசாக நழுவினார்.

பிறகு வெண்பா பாரதியிடம் என்ன கண்ணம்மாவுடன் சேர்ந்துடியா? என கண்ணம்மாவை பற்றி வழக்கம்போல் தவறாக ஏற்றிவிட்டு பாரதியையும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.

பொறுத்துக்கொள்ள முடியாத பாரதி, கண்ணம்மா என் பொண்டாட்டி தான்.அவக்கூட என்னை இவ்வளவு கேள்வி கேட்கல, நீ ஒரு மூன்றாவது நபர் எங்க வாழ்க்கையில தலையிடாத என வெண்பாவை அசிங்கப்படுத்தி பதிலடி கொடுத்தார் பாரதி.

எனவே பாரதிகண்ணம்மா சீரியலில் நடந்த இந்த தரமான சம்பவத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

சூர்யா பட நடிகையுடன் இணையும் யோகிபாபு.. அதிர்ஷ்டம் நாலாபக்கமும் அடிக்குது.!

ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கிய பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். தீயா வேலை செய்யணும் குமாரு, நானும் ரவுடி தான் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். மூக்குத்தி அம்மன் ...